பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Nov 2019 10:15 PM GMT (Updated: 15 Nov 2019 8:27 PM GMT)

தென்காசி புதிய பஸ்நிலையம் அருகில் தடையை மீறி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி, 

அயோத்தி வழக்கு குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் காவல்துறையிடம் அனுமதி கேட்டனர். இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. 

இந்த நிலையில் நேற்று மாலை தென்காசி புதிய பஸ்நிலையம் அருகில் தடையை மீறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் திப்புசுல்தான் தலைமை தாங்கினார். நகர தலைவர் செய்யது அலி பாது‌ஷா வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அகமது நவவி கண்டன உரையாற்றினார்.

நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் பசும்பொன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன் குமார் அபிநபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகா‌‌ஷ் மீனா, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜே‌‌ஷ்வரன், தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிரு‌‌ஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் ஆடிவேல், சுரே‌‌ஷ் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். 

இதனால் தென்காசி புதிய பஸ் நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

Next Story