தஞ்சாவூர் அருகே, திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - கலெக்டரிடம் மனு


தஞ்சாவூர் அருகே, திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 6 Nov 2019 10:15 PM GMT (Updated: 6 Nov 2019 7:34 PM GMT)

தஞ்சாவூர் அருகே திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட திருவள்ளுவர் குல முன்னேற்ற நல சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நெல்லை, 

திருவள்ளுவர் குல முன்னேற்ற நலசங்கத்தினர் நெல்லை மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து தஞ்சாவூர் அருகே திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் போட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை தமிழ் இன விரோதிகளால் அவமரியாதை செய்யப்பட்டு உள்ளது. இந்த அவமரியாதை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இரும்பு கூண்டு அமைத்து முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Next Story