சங்கரன்கோவில் அருகே, ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு


சங்கரன்கோவில் அருகே, ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 29 Oct 2019 10:30 PM GMT (Updated: 29 Oct 2019 7:50 PM GMT)

சங்கரன்கோவில் அருகே கோவிலுக்கு செல்லும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

நெல்லை. 

தமிழ்நாடு காட்டுநாயக்கர் சமூக சீர்திருத்த சங்கம் நெல்லை மாவட்ட தலைவர் ரவி தலைமையில் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராம மக்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் ஷில்பாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

நாங்கள் காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். சங்கரன்கோவில் அருகே கஸ்பா காட்டு நாயக்கன் தெருவில் வசித்து வருகிறோம். இங்கு சுமார் 175 குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்கள் குலதெய்வம் காளியம்மன், மாரியம்மன் ஆகிய தெய்வங்கள் ஆகும். இந்த தெய்வங்களை மற்ற சமுதாயத்தினரும் வழிபட்டு வருகிறார்கள்.

கோவிலில் வலது புறத்தில் உள்ள காலி இடத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டு வருகிறோம். அரசுக்கு சொந்தமான அந்த இடத்தில் ஒருவர் கோவிலுக்கு வரக்கூடிய பாதையை ஆக்கிரமிப்பு செய்து அடைத்து விட்டார்.

இதனால் எங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினையில் தாங்கள் தலையிட்டு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story