களக்காடு அருகே நிரம்பிய பெரிவிளாங்குளம் உடையும் அபாயம் மணல் மூட்டைகள் அடுக்கி விரிசல் சீரமைப்பு

களக்காடு அருகே நிரம்பிய பெரிவிளாங்குளம் உடையும் அபாயம் மணல் மூட்டைகள் அடுக்கி விரிசல் சீரமைப்பு
x
தினத்தந்தி 22 Oct 2019 10:15 PM GMT (Updated: 22 Oct 2019 7:50 PM GMT)

களக்காடு அருகே நிரம்பிய பெரிவிளாங்குளம் உடையும் அபாய நிலையில் உள்ளது. இதையடுத்து நகரப்பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு விரிசல் சீரமைக்கப்பட்டு உள்ளது.

களக்காடு, 

களக்காடு அருகே நிரம்பிய பெரிவிளாங்குளம் உடையும் அபாய நிலையில் உள்ளது. இதையடுத்து நகரப்பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு விரிசல் சீரமைக்கப்பட்டு உள்ளது.

மறுகால் பாய்கிறது

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மேலப்பத்தையில் பெரிவிளாங்குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்தநிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதையடுத்து குளத்திற்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டதை தொடர்ந்து, குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது.

தற்காலிகமாக சீரமைப்பு

இதற்கிடையே குளத்தின் மடை அருகே கரையில் அரிப்பு ஏற்பட்டு விரிசல் விழுந்தது. இதனால் குளம் உடையும் அபாயம் நிலவியது. இதுகுறித்து களக்காடு நகரப்பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு விவசாயிகள் தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் நிர்வாக அதிகாரி சு‌‌ஷ்மா தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார் முன்னிலையில் மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு மற்றும் நகரப்பஞ்சாயத்து ஊழியர்கள் மணல் மூட்டைகளை அடுக்கி விரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு விரிசல் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு உள்ளது.

Next Story