நடிகை கடத்தி பாலியல் வன்முறை திலீப் முதல் குற்றவாளி இல்லை 2 நாட்களில் குற்றபத்திரிகை தாக்கல்


நடிகை கடத்தி பாலியல் வன்முறை திலீப் முதல் குற்றவாளி இல்லை 2 நாட்களில் குற்றபத்திரிகை தாக்கல்
x
தினத்தந்தி 7 Nov 2017 11:54 AM GMT (Updated: 7 Nov 2017 11:54 AM GMT)

நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 நாட்களில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் முதல் குற்றவாளி திலீப் இல்லை.

திருவனந்தபுரம்,

 கேரளாவில் பிப்ரவரி 17–ந் தேதி பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைதானார்கள். பல்சர் சுனில் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் இந்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திலீப்பை ஜூலை 10–ந் தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே தான் நிரபராதி என்றும், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஏற்கனவே 2 முறை திலீப் மனுதாக்கல் செய்தார். அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து கேரள ஐகோர்ட்டில் 2 முறை தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி ஆனது. இந்நிலையில் 3–வது முறையாக ஐகோர்ட்டில் திலீப் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.அவரௌக்கு 5 வது  முறையாக ஜாமீன் கிடைத்தது

இதனையடுத்து நடிகர் திலீப் ஜாமீனில் வெளியே வந்தார். இப்போது அவர் தரப்பில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொல்லை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கற்பனையான ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு டிஜிபி லோக்நாத் பெக்ரா மற்றும் ஏடிஜிபி பி. சந்தியா தவறாக என்னை இவ்வழக்கில் குற்றம் சாட்டிஉள்ளனர் என கேரள மாநில உள்துறைக்கு தலீப்  12 பக்கங்கள் அடங்கிய கடிதத்தை கடந்த 18-ம் தேதி எழுதி உள்ளார். நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை கேரள மாநில சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரிக்கிறது. இந்நிலையில் நேர்மையான விசாரணை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் அல்லது விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என திலீப் தரப்பில் உள்துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த் நிலையில் குற்றபத்திரிகை தாக்கல் செய்வது குறித்து டிஜிபி லோக்நாத் பெக்ரா கூறும் போது  இந்த வழக்கில் 2 நாட்களில்  போலீசார் குற்றபத்திரிகையை தாக்கல் செய்வார்கள் என கூறினார்.

இந்த வழக்கில் முதலில் முதல் குற்றவாளியாக திலீப்  சேர்க்கபடுவார் என கூறப்பட்டது.தற்போது  திலீப் 7 வது குற்றவாளியாக சேர்க்கபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story