பணம், ஆத்ம திருப்தி; சினிமா பற்றி தமன்னா கணிப்பு


பணம், ஆத்ம திருப்தி; சினிமா பற்றி தமன்னா கணிப்பு
x

சினிமா துறைக்கு வருபவர்களுக்கு 2 வாய்ப்புகள் கிடைக்கும். சில வாய்ப்புகள் வங்கியில் பணம் இருப்பை மட்டுமே உயர்த்தும். இன்னும் சில வாய்ப்புகள் ஆத்ம திருப்தியைக் கொடுக்கும் என்கிறார் தமன்னா.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா கேன்ஸ் பட விழாவுக்கு சென்றுள்ளார். அங்கு தமன்னா சினிமா அனுபவங்கள் குறித்து அளித்துள்ள பேட்டியில், "சினிமா துறைக்கு வருபவர்களுக்கு இரண்டுவித வாய்ப்புகள் கிடைக்கும். சில வாய்ப்புகள் வங்கியில் பணம் இருப்பை மட்டுமே உயர்த்தும். இன்னும் சில வாய்ப்புகள் ஆத்ம திருப்தியைக் கொடுக்கும். எத்தனை படங்கள் செய்தாலும் எவ்வளவு சம்பாதித்தாலும் நமக்கு பிடித்தமானவை என்று சில படங்கள் தான் இருக்கும்.

அதில் எனக்கு கிடைத்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நான் இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்திருக்க காரணமான ஹேப்பி டேஸ் தெலுங்கு படம். இந்த படத்தை உயிருள்ளவரை மறக்க மாட்டேன். அந்த படம் நடிப்பதற்கு முன்பு என் கணக்கில் ஒரு தோல்வி படம் இருந்தது. சினிமா துறையில் என் மீது யாருக்கும் பெரிதாக நம்பிக்கை இல்லை. அந்த நேரத்தில் வெளியானது ஹேப்பி டேஸ் படம். அந்த படமும் தோற்று இருந்தால் நான் என்னவாகி இருப்பேன் என்று நினைத்தால் இன்றும் கூட எனக்கு பயமாக உள்ளது'' என்றார்


Next Story