பிரபல நடிகர் அரவிந்த் தாணு மரணம்


பிரபல நடிகர் அரவிந்த் தாணு மரணம்
x

மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக பிரபல மராத்தி நடிகர் திடீரென மரணம் அடைந்தது சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல மராத்தி நடிகர் அரவிந்த் தாணு. இவர் ஏக் ஹோதயா வால்யா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். அவரது நடிப்பில் வந்த லகே மஜி லட்கி, சுக் மானே நக்கி கே அஸ்தா, கிரைம் போல் போன்ற தொடர்கள் வரவேற்பை பெற்று அரவிந்த் தாணுவை மராட்டிய ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது.

இந்த நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அரவிந்த் தாணு கலந்து கொண்டார். மேடையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கினார். ரத்த அழுத்தமும் அதிகமானது.

இதையடுத்து அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் உடல்நிலை மோசமடைந்து அரவிந்த் தாணு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47. அரவிந்த் தாணுவின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. அவரது மறைவுக்கு மராத்தி நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Next Story