உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம் - சமந்தா குறித்து விஜய் தேவரகொண்டா வெளியிட்ட பதிவு


உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம் - சமந்தா குறித்து விஜய் தேவரகொண்டா வெளியிட்ட பதிவு
x

உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம் என்று சமந்தா குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா பதிவிட்டுள்ளார்.

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'சாகுந்தலம்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே நடிகை சமந்தா இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது. தற்போது உடல்நிலை தேறியுள்ள சமந்தா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். நடிகை சமந்தா தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.

அப்போது ரசிகர் ஒருவர் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடிக்கும் 'குஷி' படத்தின் நிலை குறித்து கேள்வி கேட்க அதற்கு "குஷி திரைப்படம் விரைவில் தொடங்கப்படும். விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் என்னை மன்னியுங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், அந்த பதிவை பகிர்ந்துள்ள நடிகர் விஜய் தேவரகொண்டா, "முழு ஆரோக்கியம் மற்றும் பெரிய புன்னகையுடன் நீங்கள் வருவதை எதிர்பார்த்து நாங்கள் அனைவரும் உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story