விஜய் தேவரகொண்டா - சமந்தா படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் - வெளியான புதிய தகவல்


விஜய் தேவரகொண்டா - சமந்தா படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் - வெளியான புதிய தகவல்
x
தினத்தந்தி 5 Feb 2023 3:38 PM GMT (Updated: 5 Feb 2023 3:39 PM GMT)

இது தொடர்பான பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


Next Story