ஜவான் படத்தின் "வந்த எடம்" பாடல் இன்று மதியம் வெளியாகும் - படக்குழு அறிவிப்பு...!


ஜவான் படத்தின் வந்த எடம் பாடல் இன்று மதியம் வெளியாகும் - படக்குழு அறிவிப்பு...!
x
தினத்தந்தி 31 July 2023 4:47 AM GMT (Updated: 31 July 2023 7:56 AM GMT)

ஜவான் படத்தின் "வந்த எடம்" பாடல் இன்று மதியம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் யோகிபாபுவும் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஜவான் படத்தின் "வந்த எடம்" பாடல் இன்று மதியம் 12.50 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story