உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'கலகத் தலைவன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!


உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கலகத் தலைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
x

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'கலகத் தலைவன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

'மீகாமன்', 'தடம்' போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் 'கலகத் தலைவன்'. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'கலகத் தலைவன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில் 'கலகத் தலைவன்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி 'கலகத் தலைவன்' திரைப்படம் வருகிற நவம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான போஸ்டரை இயக்குனர் சீனுராமசாமி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story