திரிஷா நடித்துள்ள 'ராங்கி' படத்தின் டிரைலர் வெளியானது..!


திரிஷா நடித்துள்ள ராங்கி படத்தின் டிரைலர் வெளியானது..!
x

நடிகை திரிஷா நடித்துள்ள 'ராங்கி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய எம்.சரவணன் இயக்கத்தில் நடிகை திரிஷா நடிப்பில் தயாராகி உள்ள திரைப்படம் 'ராங்கி'. இந்த படத்தில் திரிஷாவுடன் இணைந்து அனஸ்வர ராஜன், ஜான் மகேந்திரன், லிசி ஆண்டனி, கோபி கண்ணதாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இந்த திரைப்படத்துக்கு சத்யா இசையமைத்துள்ளார். சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுபாரக் படத்தொகுப்பு செய்துள்ளார். 'ராங்கி' திரைப்படம் வருகிற டிசம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், 'ராங்கி' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. திரிஷா ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டும் இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Next Story