சாதனை படைத்த 'தி கோட்' படத்தின் டிரெய்லர்


சாதனை படைத்த தி கோட் படத்தின் டிரெய்லர்
x

'தி கோட்' படத்தின் டிரெய்லர் அதிக பார்வையாளர்களை பெற்று டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

சென்னை,

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். 'தி கோட்' படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது கிராபிக்ஸ், டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் 'தி கோட்' படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த டிரெய்லரில் தந்தை, மகன் என 2 கதாபாத்திரங்களில் விஜய் நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. துப்பாக்கி சண்டை, கார் சேசிங், மோட்டார் சைக்கிளில் பறப்பது போன்ற சாகச காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இள வயதில் தோன்றும் காட்சிகள் பெரியளவில் கவனம் ஈர்த்துள்ளன.

2 நிமிடம் 51 வினாடிகள் நீளமுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் டிரெய்லர் யூடியூபில் தற்போது வரை தமிழில் 33 மில்லியன் பார்வைகளை கடந்து, டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் தெலுங்கில் 2.5 மில்லியன் பார்வைகளும், இந்தியில் 3.5 பார்வைகளையும் பெற்று ஒட்டு மொத்தமாக 39 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இது குறித்த பதிவை படக்குழுவினர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.


Next Story