பா.ரஞ்சித் தயாரித்துள்ள 'பாட்டல் ராதா' படத்தின் டீசர் வெளியானது


பா.ரஞ்சித் தயாரித்துள்ள பாட்டல் ராதா படத்தின் டீசர் வெளியானது
x

தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள 'பாட்டல் ராதா' படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் 'பாட்டல் ராதா'. தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு நிரம்பிய எமோஷனல் ரோலர்கோஸ்டராக இந்த படம் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரை நடிகர்கள் சிம்பு மற்றும் ஆர்யா தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டனர். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story