தீபாவளி தோன்றிய காரணம்


தீபாவளி தோன்றிய காரணம்
x
தினத்தந்தி 25 Oct 2022 7:32 AM GMT (Updated: 25 Oct 2022 8:31 AM GMT)

தீபாவளி பண்டிகையின் தோற்றம் பற்றி இந்துக்கள் மத்தியில் பல்வேறு ஐதீகங்கள் காணப்படுகின்றன. அவற்றை இங்கே பார்ப்போம்.

'தீபம்' என்றால் 'விளக்கு', 'ஆவளி' என்றால் 'வரிசை'. தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து இறைவனை வழிபடும் நன்னாளே, தீபாவளித் திருநாள். ஒரே விளக்கு ஏனைய விளக்குகளை ஒளி வீசச் செய்யும். அந்த முதல் ஒளியே பரமாத்மா; அதனால் ஒளிபெறும் மற்ற விளக்குகள் ஜீவாத்மாக்கள். இந்த உண்மையை உணர்த்தும் வகையில்தான் ஒளி விளக்கு திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகின்றது. தீபாவளி பண்டிகையின் தோற்றம் பற்றி இந்துக்கள் மத்தியில் பல்வேறு ஐதீகங்கள் காணப்படுகின்றன. அவற்றை இங்கே பார்ப்போம்..

* நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்தார் என்ற பழைய மரபுக் கதையின் அடிப்படையில் தோன்றியது.

* பிதுர்க்கடன் செய்வது தொடர்பான அடிப்படையில் உருவானது.

* எமதர்மனைப் போற்றும் அடிப்படையில் உருவானது.

* மகாபலி சக்கரவர்த்தியை போற்றும் வகையில் தோன்றியது.

* ராவணனை வதம் செய்த ராமபிரான், தனது மனைவி சீதையுடன் அயோத்தி திரும்பிய தினம் என்று போற்றப் படுகிறது.

இதில் நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த புராணக் கதையை முன்வைத்தே தீபாவளி பெரும்பாலும் கொண்டாடப் படுகிறது.


Next Story