'கருடன்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது


கருடன் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது
x
தினத்தந்தி 27 Jun 2024 4:10 PM GMT (Updated: 27 Jun 2024 8:26 PM GMT)

சூரி நடிப்பில் வெளியான 'கருடன்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னை,

எதிர் நீச்சல்', 'காக்கிச் சட்டை', 'கொடி', 'பட்டாசு' படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்துள்ள படம் 'கருடன்'. இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் சூரியின் நடிப்பு பாராட்டப்பட்டது.

வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார். இப்படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றதுடன், நல்ல விமர்சனத்தையும் பெற்றது. மேலும், இப்படம் இதுவரை உலகளவில் ரூ.50 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியானது.இந்த நிலையில், 'கருடன்' படத்தின் மேக்கிங் வீடியோவை இயக்குநர் துரை செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.


Next Story