கார் விபத்தில் நடிகர் காயம்


கார் விபத்தில் நடிகர் காயம்
x

பிரபல மலையாள நடிகர் ஜாய் மேத்யூ. இவர் தமிழில் பிரபுதேவாவுடன் 'தேவி', ஜெய்யுடன் 'பலூன்' மற்றும் 'கேணி' உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் வசூல் குவித்த மோகன்லாலின் 'திரிஷ்யம் 2' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார். பல படங்களை டைரக்டும் செய்துள்ளார். இந்த நிலையில் ஜாய் மேத்யூ கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கோழிக்கோடு நோக்கி ஜாய் மேத்யூ காரில் சென்று கொண்டு இருந்தார். காரை அவரே ஓட்டினார். சாவக்காடு பகுதியில் உள்ள மண்டலம் குன்று என்ற இடத்தில் வந்தபோது ஒரு வேன் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் ஜாய் மேத்யூவுக்கு பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஜாய் மேத்யூவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேன் டிரைவருக்கும் காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்.


Next Story