'கிக்' படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்தார் சந்தானம்..!


கிக் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்தார் சந்தானம்..!
x

'கிக்' திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் சந்தானம் நிறைவு செய்தார்.

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் தன்யா ஹோப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 'கிக்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சந்தானம் 'கிக்' படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இதனை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அவர் அறிவித்துள்ளார். மேலும் 'கிக்' திரைப்படம் விரைவில் உங்கள் அனைவரையும் மகிழ்விக்க திரையரங்குகளில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



Next Story