தனுஷ் இயக்கி நடித்துள்ள 'ராயன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு


தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
x

'ராயன்' திரைப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'ராயன்'. தனுஷ் நடிக்கும் 50-வது திரைப்படமான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் 'ராயன்' படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. 'ராயன்' திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 'ராயன்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் தனுஷ், சந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story