மும்பையில் வாக்களித்த திரைப் பிரபலங்கள்


மும்பையில் வாக்களித்த திரைப் பிரபலங்கள்
x

நாடாளுமன்ற 5-வது கட்ட தேர்தல் நடைபெறும் ரேபரேலி, அமேதி உள்பட 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மும்பை,

543 உறுப்பினர்களை கொண்ட இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. உலகமே எதிர்பார்க்கும் இந்த தேர்தலில் முதல் 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இதன் மூலம் 379 தொகுதிகளுக்கு தேர்தல் நிறைவடைந்து உள்ளது. இதில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வான குஜராத்தின் சூரத் தொகுதியும் அடங்கும்.

இதுவரை நடந்த 4 கட்ட தேர்தல்களின் மூலம் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்து விட்டது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற தென் இந்திய மாநிலங்கள் முக்கியமானவை ஆகும்.

4 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 5-வது கட்டமாக 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவிற்காக காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்-நடிகைகளும் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை வித்யா பாலன், அனில் கபூர், நடிகர் மனோஜ் பாஜ்பாய் மற்றும் அவரது மனைவி ஷபனா ராசா,நடிகர் அமீர்கான் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் கிரண் ராவ்,நடிகர் சன்னி தியோல், ரன்வீர் சிங்,ஜான்வி கபூர் ஆகியோர் மும்பையில் வாக்களித்தனர்.


Next Story