தென்னிந்திய சினிமாவை பாராட்டிய ஷாருக்கான் ஏன் தெரியுமா?


தென்னிந்திய சினிமாவை பாராட்டிய ஷாருக்கான் ஏன் தெரியுமா?
x

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற லோகார்னோ திரைப்பட விழாவில் நடிகர் ஷாருக்கான் தென்னிந்திய சினிமாவை பற்றி பாராட்டி பேசியுள்ளார்.

லோகார்னோ,

நடிகர் ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், பாலிவுட்டின் பிரபல நடிகரும் ஆவார். இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'பதான், ஜவான்' படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இந்த இரண்டு படங்களும் ரூ.1000 கோடி வசூலித்தது மட்டுமல்லாமல் உலகளாவிய பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

இந்தநிலையில், சுவிட்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் நடைபெற்ற 77-வது லோகார்னோ திரைப்பட விழாவில் நடிகர் ஷாருக்கானுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது. அங்கு நடைபெற்ற விழாவில் அவர் நடித்த 'தேவதாஸ்' திரைப்படம் திரையிடப்பட்டது. அதனை தொடர்ந்து ஷாருக்கான் உடனான ரசிகர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அப்போது, பாலிவுட் சினிமாவிற்கும், தென்னிந்திய சினிமாவிற்கும் இடையே உள்ள நேர்மறையான கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவர், முதலில் இந்திய சினிமாவின் செழுமையையும் பன்முகத்தன்மையையும் பற்றி பேசினார். தென்னிந்திய சினிமாவின் புத்திசாலித்தனத்தையும், இப்பகுதியில் இருந்து தொடர்ந்து வெளிவரும் தொழில்நுட்பத்தையும் மற்றும் கதையின் சிறப்பையும் பற்றி கூறினார்.

மேலும், "சினிமா ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும், தென்னிந்திய சினிமா மிகவும் அற்புதமானது", என்று பாராட்டி உள்ளார். 'ஜவான், ஆர்ஆர்ஆர் மற்றும் பாகுபலி' போன்ற சமீபத்திய பிளாக்பஸ்டர் படங்கள் உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன, என்று அவர் சுட்டிக்காட்டினார். "தென்னிந்திய சினிமாவில் ஒரு குறிப்பிட்ட பாணி உள்ளது, நான் அதை மிகவும் ரசித்தேன். அது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது, என்று பாராட்டி பேசியுள்ளார்.


Next Story