ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கார்சியா, சபலென்கா 3-வது சுற்றில் வெற்றி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கார்சியா, சபலென்கா 3-வது சுற்றில் வெற்றி
x

image courtesy: #AusOpen twitter

தினத்தந்தி 21 Jan 2023 1:25 PM GMT (Updated: 21 Jan 2023 1:58 PM GMT)

இன்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அரினா சபலென்கா, எலிஸ் மெர்டென்சுடன் மோதினார்.

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த 16-ம் தேதி தொடங்கி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, பெல்ஜியம் வீராங்கனை எலிஸ் மெர்டென்சுடன் மோதினார். இந்த போட்டியில் சபலென்கா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மெர்டென்சை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி வீராங்கனை லாரா சீக்மண்ட், பிரான்சு வீராங்கனை கரோலின் கார்சியாவுடன் மோதினார். இந்த போட்டியில் கார்சியா 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் லாராவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.


Next Story