விமானநிலையத்தில் ஏற்பட்ட மோசமான அனுபவத்தை பகிர்ந்த அதிதி ராவ்


Aditi Rao Hydari waits for 15 hours for her luggage
x

இங்கிலாந்து விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை அதிதி ராவ் பகிர்ந்துள்ளார்.

மும்பை,

தமிழில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து பிரபலமானவர் அதிதி ராவ் ஹைதரி. செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹேய் சினாமிகா ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருக்கிறார்.

விரைவில் நடிகர் சித்தார்த்தை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் இங்கிலாந்து விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அதிதி ராவ் வெளியிட்டுள்ள பதிவில், "மும்பையில் இருந்து வந்த விமானம் லண்டனில் தரையிறங்கியது. இங்கு எனது உடைமைகள் அடங்கிய லக்கேஜை எதிர்பார்த்து 19 மணி நேரமாக நான் காத்திருக்கிறேன். ஆனால் இன்னும் சூட்கேஸ் வந்து சேரவில்லை. இது மோசமான அனுபவம். அனைத்து பயணிகளும் காத்திருந்து வெறுப்படைந்து உள்ளனர். பசியால் குழந்தைகள் வாடுகின்றனர்.

லக்கேஜ் இன்னும் வரவில்லை. அதை விடுவிக்க முடியுமா. விமான நிலைய ஊழியர்கள் எந்த உதவியும் செய்யவில்லை'' இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Next Story