உலக எழுத்தறிவு தினம்


உலக எழுத்தறிவு தினம்
x
தினத்தந்தி 4 Sep 2022 1:30 AM GMT (Updated: 4 Sep 2022 1:30 AM GMT)

எழுத்தறிவு பெற்றவரால் மட்டுமே தனக்கான உரிமை, பாதுகாப்பு, பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றை புரிந்து செயல்பட முடியும்.

ரு மொழியை எழுதவும், படிக்கவும் தெரிந்திருப்பதே எழுத்தறிவு. ஒவ்வொரு தனி மனிதனும் எழுத்தறிவு பெற்றிருப்பது, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது. எழுத்துக்களைப் படிப்பது அறிவை வளர்க்க உதவும். எழுத்தும், அறிவும் ஒன்று சேர்கையில் தனித்து செயல்படுவதற்கான ஆற்றல் கிடைக்கும். அந்த ஆற்றலே ஆக்கப்பூர்வமான பல செயல்களுக்கு அடிப்படையாக அமையும்.

எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், எழுத்தறிவு இல்லாத உலகை உருவாக்கவும் ஐ.நா. சபை அமைப்பின் அங்கமான யுனெஸ்கோ, 1965-ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் அறிவித்ததைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி 'உலக எழுத்தறிவு தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.

எழுத்தறிவு பெற்றவரால் மட்டுமே தனக்கான உரிமை, பாதுகாப்பு, பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றை புரிந்து செயல்பட முடியும். குறிப்பாக பெண்களுக்கு எழுத்தறிவும், கல்வியறிவும் அவசியமானவை. எழுத்தறிவின்மையை போக்குவதற்காக அரசும், தொண்டு நிறுவனங்களும் பல்வேறு திட்டங்களின் மூலம் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. சமூகத்தின் மேம்பாட்டுக்கு அஸ்திவாரமான எழுத்தறிவை, அனைவரும் பெறுவதற்கு நம்மால் முடிந்த முயற்சிகளை செய்வோம்.


Next Story