வார ராசிபலன் 22.09.2024 முதல் 28.09.2024 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்

Update: 2024-09-22 01:14 GMT

இந்த வாரராசிபலன்:

மேஷம்

எதிர்பார்த்த தனவரவு வந்து சேரக்கூடிய காலகட்டம் இது. வியாபாரிகள் மற்றும் தொழில் துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று சிறப்பாக செயல்படுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை மேற்கொள்ளும் பொழுது கவனமாக செயல்பட வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் இரும்பு மற்றும் ரசாயன பொருட்கள் பங்குகள் மூலம் லாபம் அடைவார்கள். கலைத்துறை மற்றும் மீடியாவில் இருப்பவர்கள் புதிய தொடர்புகள் மூலம் நல்ல வாய்ப்புகளை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வாரம். மாணவர்கள் பாடங்களில் கவனமாக இருக்க வேண்டும். திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் இரவுப் பிரயாணங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்க பெறுவார்கள். தொழில் துறையினர் புதிய திட்டங்களில் முதலீடு செய்யலாம். வியாபாரிகள் புதிய கிளைகளை தொடங்குவதற்கு ஏற்ப புது பங்குதாரர்கள் வந்து சேர்வார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் திட்டமிட்ட லாபம் பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் துறையினர் அரசு தரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த பங்குகள் மூலம் லாபம் அடையலாம். கலைத்துறை மற்றும் மீடியாவில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற்று தங்களை நிரூபணம் செய்வார்கள். இல்லத்தரசிகளுக்கு இது மகிழ்ச்சியான வாரம். தடைப்பட்ட திருமண பேச்சுகள் சுமுகமாக நடந்தேறும்.

மிதுனம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தொழில் துறையினர் வாடகை கட்டிடத்தில் இருந்து சொந்த கட்டிடத்திற்கு தொழிலை மாற்றம் செய்யும் சூழல் அமையும். வியாபாரிகள் தொழிலை விருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஷேர் மார்க்கெட் துறையினர் அழகு சாதன பொருட்கள், ரியல் எஸ்டேட் ஆகிய பங்குகள் மூலம் லாபம் அடைவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை தொடங்கி பரபரப்பாக செயல்படுவார்கள். மீடியா மற்றும் கலைத்துறையினர் புகழ் பெறும் காலகட்டம் இது. இல்லத்தரசிகளுக்கு புதிய ஆடை ஆபரணச் சேர்க்கைகள் எதிர்பாராத ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஜாதக ரீதியாக மனை யோகம் அமையப்பெற்றவர்களுக்கு புதிய வீடு அல்லது மனை வாங்கும் யோகம் உண்டு.

கடகம்

பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும் வாரம் இது. தொழில் துறையினர் தொழில் விரிவாக்க முயற்சியை சிறிதுகாலம் தள்ளி வைக்க வேண்டும். வியாபாரிகள் சரக்குகள் போக்குவரத்து மூலம் வந்து சேருவது தடைபடாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் புதிய திட்டங்களை மேற்கொள்ளலாம். ஷேர் மார்க்கெட் துறையினர், கனிமங்கள் ஆயில், உணவு பொருட்கள் ஆகிய பங்குகள் மூலம் லாபம் அடைவார்கள். மீடியா மற்றும் கலைத்துறையினர் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தும் காலகட்டம் இது. இல்லத்தரசிகள் மனதில் நிம்மதி நிலவும். வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் இரவுப் பயணத்தை கண்டிப்பாக தவிர்க்கவும்.

சிம்மம்

உடன் பிறந்தவர்களால் ஆதாயம் ஏற்படும் காலகட்டம் இது. வியாபாரிகள் புதிய இடத்திற்கு தங்களுடைய தொழிலை மாற்றம் செய்யலாம். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் துறையினர் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் புதிய திட்டங்களை தொடங்குவதை தள்ளி வைக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் ரியல் எஸ்டேட் மற்றும் எரிபொருள் துறை சார்ந்த பங்குகள் மூலம் லாபம் அடைவார்கள். கலை மற்றும் மீடியா துறையினர் சுறுசுறுப்பாக செயல்பட்டு தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லத்தரசிகள் பல்வேறு இடங்களுக்கும் சென்று குடும்ப சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். மாணவ, மாணவியர் கல்வியில் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி

தடைப்பட்ட பல காரியங்கள் அனுகூலமாக நடைபெறும் காலகட்டம் இது. தொழில் துறையினர் உற்சாகமாக செயல்படுவார்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களுடைய நன்மதிப்பை பெற்று லாபம் அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளுவின் காரணமாக மன உளைச்சல் அடைவர். ஷேர் மார்க்கெட் துறையினர் திட்டமிட்ட லாபத்தை பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களில் முதலீடு செய்வதற்கான நல்ல சூழல் அமையும். மீடியா துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெற்று உற்சாகம் அடைவார்கள். கலைத்துறையினருக்கு எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் கதவைத் தட்டும். இல்லத்தரசிகள் பல நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்ச்சி அடைவார்கள். வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் இரவுப் பயணங்களை தவிர்க்கவும்.

துலாம்

உற்சாகமும் மகிழ்ச்சியும் பொங்கும் வாரம் இது. வியாபாரிகள் பல தடை தாமதங்களை சந்தித்து ஆதாயத்தை அடைவார்கள். தொழில் துறையில் இருப்பவர்கள் தடைப்பட்ட திட்டங்களை இந்த வாரம் நிறைவேற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களில் முதலீடு செய்ய நல்ல சூழல் அமைகிறது. ஷேர் மார்க்கெட் துறையினர் பல தடை தாமதங்களுக்கு பிறகு எதிர்பார்த்த ஆதாயத்தை பெறுவார்கள். அதேசமயம் புதிய பங்குகளில் முதலீடு செய்வதை இந்த வாரம் தவிர்க்க வேண்டும். மீடியா மற்றும் கலைத்துறையினருக்கு இந்த வாரம் லாபகரமாக இருக்கும். இல்லத்தரசிகள் குடும்ப சுபகாரியங்களில் மகிழ்ச்சிகரமாக முன்னின்று செயல்படுவார்கள்.

விருச்சிகம்

மகிழ்ச்சிகரமான வாரம் இது. தொழில் துறையினர் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். வியாபாரிகளுக்கு இது அனுகூலமான காலகட்டம். வரவேண்டிய பாக்கிகள் நல்லவிதமாக வசூல் ஆகும். அரசு தரப்பிலிருந்து தடைபட்ட பணிகள் நல்ல விதமாக நடந்தேறும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் வேலைச் சுமையால் உற்சாகக் குறைவு அடைவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் பல தடை தாமதங்களுக்கு இடையில்தான் புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் ரசாயன நிறுவனங்களின் பங்குகள் மூலம் லாபம் அடைவார்கள். மீடியா மற்றும் கலைத்துறையினர் மற்றவர்களது எதிர்ப்புகளை கடந்து வெற்றி அடைவார்கள். இல்லத்தரசிகளுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும்.

தனுசு

குடும்ப விஷயங்களில் நிதானமாக செயல்பட வேண்டிய காலகட்டம் இது. வாழ்க்கை துணையுடன் கருத்துவேறுபாடுகளை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களது ஆதரவை பெறுவார்கள். தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் அரசு தரப்பில் இருந்து எதிர்பார்த்த நன்மைகளை அடைவார்கள். பழைய கடன்களில் பெரும்பகுதி அடைப்பதற்கான சூழல் ஏற்படும். கலைத்துறையினர் மற்றும் மீடியா துறையினர் தங்களது உழைப்புக்கு ஏற்ற பாராட்டுகளை பெற்று மனம் மகிழ்வார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் புதிய திட்டங்களை ஒத்திவைக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் ரியல் எஸ்டேட் பங்குகளில் எதிர்பார்த்த ஆதாயத்தை பெறுவார்கள். இல்லத்தரசிகள் மன உணர்வுகளை வெளிக் காட்டாமல் செயல்பட வேண்டிய காலகட்டம் இது.

மகரம்

புதிய நம்பிக்கையும், மனதில் தெம்பும் ஏற்படும் வாரம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுக்கான அங்கீகாரத்தை பெறுவார்கள். வியாபாரிகள் தொழில் அபிவிருத்தி செய்வதற்காக புதிய வண்டி வாகனங்களை வாங்குவார்கள். தொழில் துறையினர் புதிய இடத்திற்கு மாற்றம் செய்வது அல்லது இருக்கும் இடத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகளில் ஈடுபடலாம். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களில் முதலீடு செய்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் தகவல் தொழில் நுட்பம் மற்றும் அரசு துறை பங்குகள் மூலம் லாபம் அடைவார்கள். மீடியா மற்றும் கலைத்துறையில் இருப்பவர்கள் இந்த வாரம் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் பல புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். இல்லத்தரசிகளுக்கு மனதில் நிம்மதி ஏற்படும் வாரம் இது.

கும்பம்

பல துன்ப அனுபவங்களுக்கு பிறகு மனதில் நிம்மதி ஏற்படும் காலகட்டம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று திறமையாக செயல்பட்டு நிர்வாகத்தில் பாராட்டு பெறுவார்கள். தொழில்துறையில் இருப்பவர்களுக்கு வங்கி கடன் கிடைப்பதற்கான சூழல் அமைகிறது. வியாபாரிகள் இந்த வாரம் தொழில் விரிவாக்கப் பணிகளில் ஈடுபடுவதை தள்ளி வைக்க வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களில் ஈடுபடலாம். ஷேர் மார்க்கெட் துறையினர் திரவப் பொருட்கள் சம்பந்தமான பங்குகள் மூலம் லாபம் பெறுவார்கள். கலைத்துறை மற்றும் மீடியாவில் பணியாற்றுபவர்கள் எதிர்பார்த்த அங்கீகாரத்தை பெறுவார்கள். இல்லத்தரசிகள் குடும்ப உறுப்பினர்களுடைய மகிழ்ச்சிக்காக விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.

மீனம்

செலவினங்களை கட்டுப்படுத்த வேண்டிய காலகட்டம் இது. தொழில் துறையில் இருப்பவர்கள் கடன் வாங்க வேண்டி வந்தால் குறைந்த அளவு தான் வாங்க வேண்டும். வியாபாரிகள் இந்த வாரம் நேரம். பார்க்காமல் உழைக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடைய ஆதரவு கிடைக்கப் பெறுவார்கள். அரசு துறையில் தடை தாமதமாக இருந்த காரியங்கள் இந்த வாரம் நிறைவேறும். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய முதலீடுகளை இந்த வாரம் தவிர்க்க வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் அழகு சாதன பொருட்கள் பங்குகள் மூலம் ஆதாயம் பெறலாம். கலைத்துறையினருக்கு பல தடை தாமதங்களை தாண்டி திறமையை நிரூபிக்க வேண்டிய சூழல் உருவாகும். மீடியாவில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றத் தடை ஏற்படும். இல்லத்தரசிகளின் கையில் பணம் புரளுவதால் குதூகலமாக இருப்பார்கள்.

 

Tags:    

மேலும் செய்திகள்