இன்றைய பஞ்சாங்கம்:
குரோதி வருடம் ஆனி மாதம் 24-ம் தேதி திங்கட்கிழமை.
நட்சத்திரம்: இன்று காலை (7.21) வரை பூசம் பிறகு ஆயில்யம்
திதி: திருதியை திதி
யோகம்: சித்தயோகம், கீழ்நோக்குநாள்.
நல்ல நேரம் காலை: 6.15-7.15, மாலை : 4,45-5.45
ராகுகாலம் காலை : 7.30-9.00
எமகண்டம் காலை: 10.30-12.00
குளிகை மதியம்: 1.30-3.00
சூலம்: கிழக்கு
சந்திராஷ்டமம்: தனுசு
இன்றைய ராசிபலன்:
மேஷம்
சந்தோஷம் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.
ரிஷபம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்ட சிலரின் சந்திப்பு கிட்டும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.
மிதுனம்
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். ஆரோக்கியம் சீராகும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.
கடகம்
தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றிக் கொள்ளவேண்டிய நாள். வாங்கல் கொடுக்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். விட்டுப்போன விவாகப்பேச்சுகள் மீண்டும் வந்துசேரலாம்.
சிம்மம்
யோகமான நாள். மனதில் ஊக்கமும், உற்சாகமும் குடிகொள்ளும். தனவரவில் இருந்த தடைகள் அகலும். பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.
கன்னி
சிறப்புகள் வந்து சேர சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். உடன் பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறும்.
துலாம்
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைத்து மகிழும் நாள். வருமானம் திருப்தி தரும். எதிர்பாராத விதத்தில் வரன்கள் முடிவடையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
விருச்சிகம்
நன்மைகள் வந்து சேரும் நாள். பக்கத்தில் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பர். நிச்சயித்த காரியம் நிச்சயித்தபடியே நடைபெறும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
தனுசு
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பொறுப்புகள் அதிகரிக்கும். கையிருப்புக் கரையும். வாகன பழுதுச் செலவுகளால் வாட்டம் ஏற்படும். விரும்பாத ஒருவரை முக்கிய இடத்தில் சந்திக்க நேரிடும்.
மகரம்
செல்வநிலை உயரும் நாள். கடமையை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். நீண்ட நாட்களாக முயற்சித்த காரியம் இன்று நடைபெறும்.
கும்பம்
யோகமான நாள். காரிய வெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு, இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். கருத்துவேறுபாடுகள் அகலும், கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மீனம்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அதிகாலையிலேயே நல்ல தகவல் வரலாம். வருமானம் திருப்தி தரும். குடும்பத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.