இன்றைய ராசிபலன் - 25.09.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்;

Update: 2024-09-25 01:15 GMT

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் புரட்டாசி மாதம் 9ம் தேதி புதன்கிழமை

திதி : இன்று மாலை 05.55 வரை அஷ்டமி பின்பு நவமி

நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.12 வரை மிருகசீரிடம் பின்பு திருவாதிரை

யோகம் : சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 9.15 - 10.15

நல்ல நேரம் மாலை : 4.45 - 5.45

ராகு காலம் மாலை : 12.00 - 1.30

எமகண்டம் காலை: 7.30 - 9.00

குளிகை காலை : 10.30 - 12.00

கௌரி நல்ல நேரம் காலை : 10.45 - 11.45

கௌரி நல்ல நேரம் மாலை : 6.30 - 7.30

சூலம் : வடக்கு

சந்திராஷ்டம் : விசாகம்

இன்றைய பலன்கள்

மேஷம்

கணவன் மனைவி உறவில் பிரச்சினை இருக்காது. பிள்ளைகள் தங்கள் சந்தேகங்களை பெற்றோரிடம் போக்கிக் கொள்வர். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

ரிஷிபம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும். விவசாயிகளின் பொருட்களுக்கு விலை ஏற்றம் உண்டு. பயணங்களின் போது செல்போன் பேச வேண்டாம். தம்பதிகளிடையே அன்பு பெருகும். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் அலைச்சல் உண்டு.

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

மிதுனம்

தம்பதிகள் சமரசமாக செல்வர். வரவுக்கேற்ப செலவு செய்வர். உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். உணவு வியாபாரம் நன்கு நடைபெறும். அரசு சம்பந்தப்பட்ட விசயங்களில் நல்ல செய்தி கிட்டும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கடகம்

கணவரிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிள்ளைகளால் நன்மைகள் நடக்கும். தேக ஆரோக்கியம் சிறக்கும். சுப காரியம் கைகூடும். ஆவணங்களை பத்திரப்டுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

சிம்மம்

தம்பதிகள் இணைந்து செயல்படுவர். பூர்வீக சொத்தில் தங்கள் பங்கு கிடைக்கும். வழக்குகளை இழுத்தடிக்கும். மாணவர்கள் விடுமுறையை கைத்தொழில் கற்க பயன்படுத்துவர். எதிர்பார்த்த காரியம் இன்று நிறைவேறும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கன்னி

எதிர்பாராத சந்திப்பு நிகழும். வேற்றுமதத்தவர் உதவுவார். செலவு கூடும். சிக்கனம் தேவை. பழைய வீட்டை சீர் செய்வீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலை வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை

துலாம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

விருச்சிகம்

பணியாளர்களுக்கு, வேலைப்பளு இருக்கும். வியாபாரத்தில் சூழ்ச்சியை வெல்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவுவர். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. நண்பர்கள் உண்மையாக இருப்பர். தம்பதிகளின் அன்பு மேலோங்கும். உத்யோகத்தில் மதிப்பு கூடும்.

திரைப்படம் பார்த்தல் போன்றவைகளில் நேரத்தை செலவழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : வான்நீலம்

தனுசு

வியாபாரம் செழிக்கும். தம்பதிகளின் அன்யோன்யம் பெருகும். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு இடுப்பு கை, கால் வலி நீங்கும். மாணவர்கள் பகுதி படிப்பில் சேருவர். உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பர்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மகரம்

அரைகுறையாக நின்ற விஷயங்கள் உடனே முடியும். உடல்நிலையில் சிறுபாதிப்பு ஏற்பட்டு விலகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். தாய்வழி உறவினர்களிடம் மதிப்பு, மரியாதைக் கூடும். கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள். மாமியார் மருமகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கும்பம்

மனைவி வீட்டாரிடம் நல்லுறவு ஏற்படும்.தம்பதிகளிடம் அன்யோன்யம் மிகும். நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள். பெண் உத்யோகஸ்தர்களை சுயமரியாதையுடன் நடத்தப்படுவர். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மீனம்

உறவினர்கள் வருகை உண்டு. மாணவர்கள் உறவினர் வீட்டிற்கு விசேஷத்திற்காக செல்வர். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நினைத்த பதவி கிடைக்கும். தேக ஆரோக்கியம் மேம்படும். மார்கெட்டிங் பிரிவினர் இலக்கினை முடிப்பர். எதிர்பார்த்த புதிய வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

Tags:    

மேலும் செய்திகள்