இன்றைய ராசிபலன் - 06.01.2025

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.;

Update:2025-01-06 07:04 IST

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் மார்கழி மாதம் 22-ந் தேதி திங்கட்கிழமை

நட்சத்திரம்: இன்று மாலை 07.53 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி

திதி: இன்று மாலை 06.56 வரை சப்தமி பின்பு அஷ்டமி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 09.45 -10.30

நல்ல நேரம் மாலை: 04.30 - 05.30

ராகு காலம் காலை: 07.30 - 09.00

எமகண்டம்: காலை 10.30 - 12.00

குளிகை மாலை: 01.30 - 03.00

கௌரி நல்ல நேரம்: காலை 01.30 - 2.30

கௌரி நல்ல நேரம்: மாலை 07.30 - 08.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: மகம், பூரம்

ராசிபலன்:

மேஷம்

இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். படிப்பில் ஆர்வம் பிறக்கும். பிள்ளைகளின் ஆசையை பூர்த்தி செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வழக்கில் இழுபறிகள் நீங்கும். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

ரிஷபம்

விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். பிள்ளைகளின் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மிதுனம்

ஷேர் மூலம் பணம் வரும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வியாபாரிகளுக்கு விற்பனை கூடும். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு குறையும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கடகம்

பழைய பிரச்சினைகளுக்கு ஒரு பக்கம் தீர்வுகள் கிடைக்கும். இளைஞர்களின் புது முயற்சிகள் வெற்றி தரும். பழுதான மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வி.ஐ.பி.களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

மகம், பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கியமான நபர்களை சந்திப்பதை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கன்னி

எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் தொடர்பு கிடைக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். உடல் நலம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

துலாம்

வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். அப்பாவின் உடல் நலம் சீராகும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவுவர். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். மகனுக்கு புது வேலை கிடைக்கும். உடல் நலம் மேம்படும். வியாபாரம் சூடு பிடிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

விருச்சிகம்

அரசியலில் செல்வாக்குக் கூடும். புதிதாக வீட்டிற்கு தேவையான சாதனங்கள் வாங்குவீர்கள். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். வழக்கு சாதகமாகும். திருமணத் தடை நீங்கும். புது வேலை வாய்ப்புகள் அமையும். முதல் முயற்சியிலேயே எடுத்த காரியங்கள் சித்தியாகும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்றிணைவர். பணவரவில் திருப்திகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

தனுசு

வீட்டை அழகுப்படுத்துவீர்கள். கணவன்-மனைவிக்குள் வரும் சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் பேசி தீர்க்கப்பாருங்கள். அவ்வப்போது மனஇறுக்கம், அசதி, சோர்வு வந்துப் போகும். அரசியல்வாதிகளுக்கு புது பொறுப்புகள் தேடி வரும். முடிவுகள் எடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மகரம்

கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

உத்தியோகத்தில் மூத்த அதிகாரி அலுவலக ரகசியங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வார். கலைத்துறையினர்கள் உங்களின் கற்பனைத் திறன் வளரும். வாகனத்தை சரி செய்வீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். ஓரளவு பணம் வரும். புது வீடு கட்ட லோன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

அரசு காரியங்கள் இழுபறியாகும். வழக்கால் இருந்த நெருக்கடி நீங்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பழைய சொத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். மாணவர்கள் கல்வியில் சிறப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்



 


Tags:    

மேலும் செய்திகள்