மியாமி ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி

2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்த அல்காரஸ் இந்த தொடரில் இருந்து வெளியேறினார்.;

Update:2025-03-23 06:47 IST
மியாமி ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி

image courtesy: PTI

மியாமி,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில், முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), டேவிட் கோபின் (பெல்ஜியம்) உடன் மோதினார்.

இதில் அல்காரஸ் எளிதில் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அதற்கேற்றவாறே முதல் செட்டை அல்காரஸ் கைப்பற்றினார். ஆனால் அடுத்த 2 செட்டுகளை கோபின் கைப்பற்றி அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டேவிட் கோபின் 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். தோல்வியடைந்த அல்காரஸ் 2-வது சுற்றோடு நடையை கட்டினார்.

டேவின் கோபின் 3-வது சுற்றில் நகஷிமா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்