பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள்.. முழு விவரம்

ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக தொடங்கியது.

Update: 2024-07-28 00:50 GMT

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு:-

துப்பாக்கி சுடுதல்:- இளவேனில், ரமிதா ஜிண்டால் (பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதி சுற்று), பகல் 12 45 மணி.

அர்ஜூன் பாபுதா, சந்தீப் சிங் (ஆண்களுக்கான 10 ஏர் ரைபிள் தகுதி சுற்று), பிற்பகல் 2 45 மணி.

மனு பாகெர் (பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் இறுதிப்போட்டி), மாலை 3 30 மணி.

பேட்மிண்டன்: பி.வி.சிந்து (இந்தியா)-பாத்திமா நபாஹா (மாலத்தீவு), (பெண்கள் ஒற்றையர் லீக் சுற்று), பகல் 12.50 மணி.

எச்.எஸ்.பிரனாய் (இந்தியா) - பாபியன் ரோத் (ஜெர்மனி), (ஆண்கள் ஒற்றையர் லீக் சுற்று), இரவு 8 மணி.

துடுப்பு படகு: பால்ராஜ் பன்வார் (ஆண்களுக்கான சிங்கிள் ஸ்கல்ஸ் ரிபிசாஜ் சுற்று), பகல் 1.06.

டேபிள் டென்னிஸ்:- ஸ்ரீஜா அகுலா (இந்தியா) - கிறிஸ்டினா கால்பெர்க் (சுவீடன்), (பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று), பிற்பகல் 2 15 மணி.

சரத் கமல் (இந்தியா) - டெனி கொஜூல் (சுலோவேனியா), (ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று), மாலை 3 மணி.

மணிகா பத்ரா (இந்தியா) - அன்னா ஹூரேசி (இங்கிலாந்து), (பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று), மாலை 4 30 மணி.

நீச்சல்:- ஸ்ரீஹரி நடராஜ் (ஆண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் தகுதி சுற்று), பிற்பகல் 2 30 மணி.

தினிதி தேசிங்கு (பெண்கள் 200 மீட்டர் பிரீஸ்டைல் தகுதி சுற்று), பிற்பகல் 2 30 மணி.

டென்னிஸ்:- சுமித் நாகல்-கோரென்டின் மவுடெட் (பிரான்ஸ்), (ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று), மாலை 3 30 மணி.

குத்துச்சண்டை:- நிகாத் ஜரீன் (இந்தியா)-மேக்சி கரினா கோட்ஜெர் (ஜெர்மனி), (பெண்கள் 50 கிலோ எடைபிரிவு தொடக்க சுற்று), மாலை 3.50 மணி.

வில்வித்தை:- அங்கிதா பகத், தீபிகா குமாரி, பஜன் கவுர் (பெண்கள் அணிகள் பிரிவு கால்இறுதி), மாலை 5 45 மணி.

Tags:    

மேலும் செய்திகள்