வெண்கலப் பதக்கத்துடன் வேட்டி, சட்டையணிந்து 'ஈபிள் டவர்' முன் போஸ் கொடுத்த ஸ்ரீஜேஷ்

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

Update: 2024-08-11 10:08 GMT

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த மாதம் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் 3 வெண்கலம், மல்யுத்தம், ஆக்கியில் தலா ஒரு வெண்கலம், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவின் வெள்ளி என 6 பதக்கங்கள் கிடைத்தன.இந்நிலையில் உலகின் மிகப்பெரிய இந்த விளையாட்டு திருவிழா இன்று இரவு விமரிசையாக நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவையொட்டி வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கர், மீண்டும் வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்திய இந்திய ஆக்கி அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கின்றனர்.

இந்த நிலையில். பாரிசீல் உள்ள உலகப்புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் முன் வெண்கலப் பதக்கத்துடன் வேட்டி, சட்டையணிந்து இந்திய ஆக்கி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் போஸ் கொடுத்துள்ளார்.இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்