பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்திய அணி..? ஜெர்மனியுடன் இன்று மோதல்
இன்று நடைபெற உள்ள மற்றொரு அரையிறுதியில் நெதர்லாந்து - ஸ்பெயின் அணிகள் விளையாடுகின்றன.
பாரீஸ்,
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று ஆக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்திய அணி பலம் வாய்ந்த ஜெர்மனி அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
முன்னதாக மாலை 5 30 மணிக்கு நடைபெறும் முதலாவது அரையிறுதியில் ஸ்பெயின் - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.