பாரீஸ் ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.;
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது
ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் (இந்திய நேரப்படி) :-
கோல்ப்:- தீக்ஷா தாகர், அதிதி அசோக் (பெண்கள் பிரிவு 2-வது சுற்று), பகல் 12 30 மணி.
தடகளம்:- ஜோதி யர்ராஜி (பெண்கள் 100 மீட்டர் தடை ஓட்டம் ரிபிசாஜ் சுற்று), பிற்பகல் 2.05 மணி. நீரஜ் சோப்ரா (ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி), இரவு 11.55 மணி.
மல்யுத்தம்:- அமன் ஷெராவத் (இந்தியா)- விளாடிமிர் எகோரோவ் (மாசிடோனியா) (ஆண்களுக்கான 57 கிலோ பிரீஸ்டைல் தொடக்க சுற்று), பிற்பகல் 2 30 மணி. அன்ஷூ மாலிக் (இந்தியா)- ஹெலன் மரூலிஸ் (அமெரிக்கா) (பெண்களுக்கான 57 கிலோ பிரீஸ்டைல் தொடக்க சுற்று), பிற்பகல் 2 30 மணி.
ஆக்கி:- இந்தியா- ஸ்பெயின் (ஆண்கள் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டி), மாலை 5 30 மணி.
பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், மொத்தம் உள்ள 6 வாய்ப்புகளில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 2-வது வாய்ப்பில் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்துள்ளார். அவரை தொடர்ந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 2-வது வாய்ப்பில் 89.45 தூரத்திற்கு வீசி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
தமிழ்நாட்டில்தான் எனது பயணம் தொடங்கியது. ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என இந்திய ஆக்கி வீரர் ஸ்ரீஜெஷ் கூறியுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் ஆண்களுக்கான 57 கிலோ பிரீஸ்டைல் அரையிறுதி சுற்றில் இந்திய வீரரான அமன் ஷெராவத், ஜப்பானை சேர்ந்த ஹிகுச்சி ரெய் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஹிகுச்சி 10-0 என்ற கணக்கில் அமன் ஷெராவத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
தோல்வியடைந்த அமன் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் க்ரூஸ் டேரியன் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
பராகுவேவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை லூவானா அலான்சோவின் அழகு சக வீரர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் உள்ளதால், அந்த நாட்டு ஒலிம்பிக் அணி நிர்வாகிகளே அவரை தாயகம் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் நடத்தை தொடர்பான குற்றச்சாட்டை மறுத்த லுவானா, "நான் ஒலிம்பிக் குழுவில் இருந்து அகற்றப்படவோ வெளியேற்றப்படவோ இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துங்கள். நான் இதுகுறித்து எந்த அறிக்கையையும் கொடுக்க விரும்பவில்லை, ஆனால் பொய்கள் என்னை பாதிக்க விடமாட்டேன்" என்று கூறியுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி ஸ்பெயினை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
மல்யுத்த போட்டியின் ஆண்களுக்கான 57 கிலோ பிரீஸ்டைல் காலிறுதி சுற்றில் இந்திய வீரரான அமன் ஷெராவத், அல்பேனிய வீரரான அபகரோவ் ஜெலிம்கான் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அமன் 12-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் அரையிறுதியில் ஜப்பான் வீரரான ஹிகுச்சு ரெய் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
மல்யுத்த போட்டியில் பெண்களுக்கான 57 கிலோ பிரீஸ்டைல் தொடக்க சுற்றில் இந்திய வீராங்கனையான அன்ஷூ மாலிக் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அமெரிக்காவை சேர்ந்த ஹெலன் மரூலிசிடம் 2-7 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.