பாரீஸ் ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

Update: 2024-08-08 02:37 GMT
Live Updates - Page 2
2024-08-08 09:45 GMT

இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ பிரீஸ்டைல் தொடக்க சுற்றில் இந்திய வீரரான அமன் ஷெராவத், மாசிடோனியா வீரரான விளாடிமிர் எகோரோவ் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட அமன் ஷெராவத் 10-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

2024-08-08 07:33 GMT

ஒலிம்பிக் போட்டி தொடரில் 27 தங்கம், 37 வெள்ளி என மொத்தம் 94 பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 25 தங்கம் வென்றுள்ள சீனா 2-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் 3 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா 67-வது இடத்தில் உள்ளது.

2024-08-08 06:16 GMT

நீரஜ் சோப்ரா இன்று தங்கம் வென்றால், எரிக் லெம்மிங் (சுவீடன், 1908-24) ஜான்னி மைரா (பின்லாந்து, 1920-24), ஜான் ஜெலெஸ்னி (செக் குடியரசு, 1992-96, 2000), ஆன்ட்ரியாஸ் (நார்வே, 2008) ஆகியோருக்கு பின், தங்கப்பதக்கத்தை தக்க வைக்கும் 5-வது வீரர் என்ற சாதனையை படைக்கலாம்.

2024-08-08 05:06 GMT

ஒலிம்பிக்கில் ஆண்கள் ஆக்கி போட்டியில் அரைஇறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவும், ஸ்பெயினும் இன்று வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் மோதுகின்றன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி அரைஇறுதியில் ஜெர்மனியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. கடந்த முறை வெண்கலம் வென்ற இந்தியா அந்த பதக்கத்தை தக்க வைக்குமா என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த ஆட்டம் மாலை 5 30 மணிக்கு தொடங்குகிறது.

2024-08-08 04:09 GMT

இந்தியாவின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இன்று இறுதிசுற்றில் களம் இறங்குகிறார். அவர் மீண்டும் தங்கம் வென்று சாதனை படைப்பாரா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்