பராகுவேவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை லூவானா... ... பாரீஸ் ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

பராகுவேவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை லூவானா அலான்சோவின் அழகு சக வீரர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் உள்ளதால், அந்த நாட்டு ஒலிம்பிக் அணி நிர்வாகிகளே அவரை தாயகம் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் நடத்தை தொடர்பான குற்றச்சாட்டை மறுத்த லுவானா, "நான் ஒலிம்பிக் குழுவில் இருந்து அகற்றப்படவோ வெளியேற்றப்படவோ இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துங்கள். நான் இதுகுறித்து எந்த அறிக்கையையும் கொடுக்க விரும்பவில்லை, ஆனால் பொய்கள் என்னை பாதிக்க விடமாட்டேன்" என்று கூறியுள்ளார்.

Update: 2024-08-08 16:05 GMT

Linked news