மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: பேட்டிங் பட்டியலில் ஏற்றம் கண்ட ஸ்மிருதி மந்தனா

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) நேற்று வெளியிட்டது.

Update: 2024-12-18 05:56 GMT

Image Courtesy: @BCCIWomen

துபாய்,

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) நேற்று வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் (773 புள்ளி) முதல் இடத்தில் உள்ளார். இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (734 புள்ளி) 3 இடங்கள் முன்னேறி 2வது இடத்திற்கு வந்துள்ளார்.

இந்தப்பட்டியலில் இலங்கையின் சமாரி அத்தபத்து (733 புள்ளி) 3ம் இடத்திலும், இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர் பிரண்ட் (715 புள்ளி) 4ம் இடத்திலும் உள்ளனர். ஒருநாள் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் சோபி எக்லெஸ்டோன் (771 புள்ளி) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் (731 புள்ளி) 2ம் இடத்திலும், ஆஷ்லே கார்ட்னெர் (709 புள்ளி) 3ம் இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் மரிசான் கேப் (444 புள்ளி) முதல் இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னெர் (398 புள்ளி) 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். வெஸ்ட் இண்டீஸின் ஹேலி மேத்யூஸ் (394 புள்ளி) ஒரு இடம் சரிந்து 3வது இடத்திற்கு வந்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்