ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறினார் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்
ஹாரி புரூக்கை பின்னுக்கு தள்ளி ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
துபாய் ,
டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 895 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டதால் , சக வீரரான ஹாரி புரூக்கை பின்னுக்கு தள்ளி அவர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஹாரி புரூக் 876 புள்ளிகளுடன் 2வது இடத்தில உள்ளார். நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 867புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார் .
இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் 4வது இடத்திலும் , ரிஷப் பண்ட் 9வது இடத்திலும் , சுப்மன் கில் 16வது இடத்திலும் , விராட் கோலி 20வது இடத்திலும் , ரோகித் சர்மா 30வது வது இடத்திலும் உள்ளனர்.