அஸ்வினுக்கு ஐசிசி தலைவர் ஜெய் ஷா வாழ்த்து

அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Update: 2024-12-18 13:21 GMT

பிரிஸ்பேன்,

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் இதுவரை 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக 765 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அஸ்வின் ஓய்வு தொடர்பாக ஐசிசி தலைவர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

இந்தியாவின் சிறந்த மேட்ச் வின்னர்களில் ஒருவர் . பந்தைக் சிறப்பாக கையாளும் வித்தைக்காரர் மற்றும் விளையாட்டின் திறமையான சிந்தனையாளர். பெருமைப்பட வேண்டிய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை. எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.என தெரிவித்துள்ளார் . 

Tags:    

மேலும் செய்திகள்