இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்; டிராவிஸ் ஹெட் விளையாடுவது சந்தேகம்..?

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி தொடங்குகிறது.

Update: 2024-12-18 08:12 GMT

Image Cortesy: AFP

பிரிஸ்பேன்,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வந்தது.

மழையால் பாதிப்புக்கு உள்ளான இந்த ஆட்டம் இன்று டிராவில் முடிந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்நிலையில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடுவாரா? என கேள்வி எழும்பி உள்ளது.

பிரிஸ்பேன் டெஸ்டில் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தின் போது டிராவிஸ் ஹெட்டுக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் மெல்போர்ன் டெஸ்டில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்