மகளிர் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான தொடர் - வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி டிசம்பர் 15-ம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2024-11-28 07:57 GMT

image courtesy: AFP

ஆண்டிகுவா,

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடரும், இதனையடுத்து ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டி வரும் டிசம்பர் 15-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்திய சுற்றுப்பயணத்திற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹீலி மேத்யூஸ் தலைமையிலான அந்த அணியில் ஸ்டாபானி டெய்லர் காயம் காரணமாக இடம்பெறவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் பின்வருமாறு:- ஹீலி மேத்யூஸ் (கேப்டன்), ஷெமைன் காம்ப்பெல்லே (துணை கேப்டன்), ஆலியா அலீன், ஷாமிலியா கானல், நெரிசா கிராப்டன், டியாண்ட்ரா டோட்டின் அபி பிளெட்சர், ஷபிகா கஜ்னாபி, சினெல்லே ஹென்றி, ஜைடா ஜேம்ஸ், கியானா ஜோசப், மாண்டி மங்ரு, அஷ்மினி முனிசார், கரிஷ்மா ராம்ஹராக், ரஷாதா வில்லியம்ஸ்

Tags:    

மேலும் செய்திகள்