வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன..?
வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.
துபாய்,
வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் 1 முதல் 7 இடங்களுக்குள் அணிகள் மாற்றமின்றி தொடருகின்றன.
ஆனால் கடைசி இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசத்தை வீழ்த்தியதன் மூலம் ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளது. அதேவேளை 8-வது இடத்தில் இருந்த வங்காளதேசம் ஒரு இடம் சரிந்து கடைசி இடத்திற்கு (9-வது இடம்) தள்ளப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்:-
1. இந்தியா - 61.11 சதவீதம்
2. ஆஸ்திரேலியா -57.69 சதவீதம்
3. இலங்கை - 55.56 சதவீதம்
4. நியூசிலாந்து - 54.55 சதவீதம்
5. தென் ஆப்பிரிக்கா - 54.17 சதவீதம்
6. இங்கிலாந்து - 40.79 சதவீதம்
7. பாகிஸ்தான் - 33.33 சதவீதம்
8. வெஸ்ட் இண்டீஸ் - 26.67 சதவீதம்
9. வங்காளதேசம் - 25.00 சதவீதம்