ரிஷப் பண்ட் அடுத்த போட்டியில் விளையாடுவாரா..? - கேப்டன் ரோகித் சர்மா பதில்

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காயத்தை சந்தித்தார்.

Update: 2024-10-20 12:03 GMT

Image Courtesy: AFP

பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டடெஸ்ட், தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நியூசிலாந்துக்காக சிறப்பாக பேட்டிங் செய்த ரச்சின் ரவீந்திராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. 2வது டெஸ்ட் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது.

முன்னதாக அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காயத்தை சந்தித்தார். குறிப்பாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அதை முழங்காலில் காயத்தை சந்தித்ததால் மேற்கொண்டு அவர் பேட்டிங் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவுக்காக காயத்தையும் தாண்டி விளையாடிய அவர் 99 ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார்.

இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இந்நிலையில் காயமடைந்துள்ள ரிஷப் பண்ட் அடுத்த போட்டியில் விளையாடுவாரா..? என்பது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

அவர் தன்னுடைய முழங்காலில் பெரிய அறுவை சிகிச்சை மேற்கொண்டார் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே அவருடைய விஷயத்தில் நாங்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அவர் எப்படி இருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். பேட்டிங் செய்யும் போது அவர் சவுகரியத்துடன் ஓட முடியாமல் தடுமாறினார். அதனாலேயே அவர் பந்தை மைதானத்திற்கு வெளியே அடிப்பதற்கு முயற்சித்தார். அவரை போன்றவர் மீது நாங்கள் அதிகமான கவனம் செலுத்த வேண்டும்.

உண்மையில் முழங்காலில் பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் கடின காலத்தை கடந்து வந்தார். கீப்பிங் செய்யும் போது ஒவ்வொரு பந்துக்கும் நீங்கள் உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். அதனாலேயே அவரை கீப்பிங் செய்ய அனுப்பாமல் அடுத்த போட்டிக்கு தயாராக உதவலாம் என்று நாங்கள் முடிவெடுத்தோம்.

தயவு செய்து சூழ்நிலையை உணர்ந்து விளையாடுங்கள் என்பது போல் நாங்கள் அவரிடம் பேசுவோம். ஆனால் ரிஷப் பண்ட் அவருடைய ஸ்டைலில் விளையாடவே விரும்புகிறார். அது போன்ற மனநிலையில் அவர் வெற்றிகரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அவர் சுதந்திரமாக விளையாடுவதற்கு நாங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்