பெர்த் டெஸ்ட்; வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றது ஏன்..? - ரவி சாஸ்திரி விளக்கம்

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-11-22 06:00 GMT

Image Courtesy: PTI

பெர்த்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடி வரும் இந்தியா தடுமாறி வருகிறது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். மேலும், அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை. வாஷிங்டன் சுந்தர் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், பெர்த் டெஸ்ட் போட்டியில் அஸ்வின், ஜடேஜாவை காட்டிலும் வாஷிங்டன் சுந்தருக்கு ஆடும் லெவனில் இடம் அளிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.

இந்த ஆட்டத்தின் வர்ணனையில் இருந்த ரவி சாஸ்திரியிடம், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் அஸ்வின், ஜடேஜாவை காட்டிலும் வாஷிங்டன் சுந்தருக்கு ஆடும் லெவனில் இடம் அளிக்கப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ரவி சாஸ்திரி கூறியதாவது,

நியூசிலாந்துக்கு எதிரான அவரது சமீபத்திய பார்ம் மற்றும் பேட்டிங் ஆர்டரில் எந்த நிலையிலும் பேட் செய்யும் திறன் காரணமாக அஸ்வின், ஜடேஜாவை காட்டிலும் வாஷிங்டன் சுந்தருக்கு ஆடும் லெவனில் இடம் அளிக்கப்பட்டது என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்