147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ரிஷப் பண்ட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது பண்ட் இந்த சாதனையை படைத்துள்ளார்.

Update: 2024-11-22 09:20 GMT

பெர்த்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 150 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்களும், பண்ட் 37 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியாவும் 42 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

முன்னதாக ரிஷப் பண்ட் இந்த இன்னிங்சில் அடித்த ரன்களையும் சேர்த்து டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 661 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்