தோனி ஸ்டம்பிங் செய்த விதம்... - ஆட்ட நாயகன் நூர் அகமது கருத்து
மும்பைக்கு எதிராக நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நூர் அகமது 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.;

Image Courtesy: @IPL / @ChennaiIPL
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தலா 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 31 ரன்கள் எடுத்தார்.
சென்னை தரப்பில் நூர் அகமது 4 விக்கெட்டும், கலீல் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை 19.1 ஓவரில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 65 ரன்னும், ருதுராஜ் 53 ரன்னும் எடுத்தனர்.
இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நூர் அகமது-க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஐ.பி.எல் தொடரில் இங்கே விளையாடுவதை ஸ்பெஷலாக உணர்கிறேன். எங்களுடைய அணிக்காகவும் எங்கள் அணியின் வெற்றிக்காக ஆற்றிய பங்கிற்காகவும் மகிழ்ச்சி.
பிட்ச்சில் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்யும் திட்டத்தில் கவனம் செலுத்தினேன். சூர்யகுமார் விக்கெட் ஸ்பெஷலானது. அதை எம்.எஸ்.தோனி ஸ்டம்பிங் செய்த விதம் உலகிற்கு அப்பாற்பட்டது. மஹி பாய் போன்றவர் ஸ்டம்புக்கு பின்னே நின்று எனக்கு உதவி செய்வதை சிறப்பாக உணருகிறேன். அது எனக்கு மிகப்பெரிய ஆதரவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.