டெஸ்ட் கிரிக்கெட்: முதல் ஓவரில் அதிக ரன்கள்.. வரலாற்று சாதனை படைத்த ஜெய்ஸ்வால்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் ஜெய்ஸ்வால் இந்த சாதனையை படைத்துள்ளார்.;

Update: 2025-01-04 07:53 GMT

சிட்னி,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 185 ரன்களும், ஆஸ்திரேலியா 181 ரன்களும் அடித்தன.

பின்னர் 4 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் அடித்துள்ளது ஜடேஜா 8 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இதுவரை 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த இன்னிங்சில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால், ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே 4 பவுண்டரிகள் அடித்து அசத்தினார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சின் முதல் ஓவரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்