நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்

Update: 2024-10-17 03:29 GMT

பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் நேற்று அங்கு கன மழை கொட்டியது. இதனால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். டாஸ் கூட போடப்படாமல் முதல் நாள்ஆட்டம் ரத்தானது .

இந்த நிலையில், இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கி உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார் அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது .

இந்தியா:

ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் , ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

நியூசிலாந்து :

டாம் லாதம், டெவன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளன்டெல், கி ளென் பிலிப்ஸ், மேத் ஹென்றி, டிம் சவுதி, அஜாஸ் பட்டேல், வில்லியம் ஓரூர்கே 

Tags:    

மேலும் செய்திகள்