தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்; வங்காளதேச அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

Update: 2024-10-16 13:51 GMT

Image Courtesy: @ICC

டாக்கா,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும். இந்த தொடர் வரும் 21ம் தேதி டாக்காவில் தொடங்குகிறது.

இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வங்காளதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அணியில் சீனியர் வீரர்களான ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பர் ஜாகர் அலி டெஸ்ட் அணியில் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளார்.

வங்காளதேச அணி விவரம்; நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), ஷத்மான் இஸ்லாம், மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), ஜாகர் அலி அனிக், மெஹதி ஹசன் மிராஸ், தைஜூல் இஸ்லாம், நயீம் ஹசன், தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், நஹித் ராணா.


Tags:    

மேலும் செய்திகள்