டி20 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு

டி20 உலகக்கோப்பை இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் விளையாடுகின்றன.

Update: 2024-06-05 14:06 GMT

image courtesy: twitter/@BCCI

நியூயார்க்,

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள 8-வது லீக் ஆட்டத்தில் 'ஏ பிரிவில்' இடம்பெற்றுள்ள இந்தியா - அயர்லாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டம் நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்