சையத் முஷ்டாக் அலி கோப்பை: கர்நாடகா அபார பந்துவீச்சு.. 90 ரன்களில் சுருண்ட தமிழக அணி
தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 24 ரன்கள் அடித்தார்.
இந்தூர்,
17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தூரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி ஆரம்பம் முதலே கார்நாடகா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முன்னணி வீரர்களான பாபா இந்திரஜித் (5 ரன்கள்), ஜெகதீசன் (0), விஜய் சங்கர் (0), ஷாருக்கான் (19 ரன்கள்) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய தமிழக அணி 90 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கடைசி பந்தில் குர்ஜப்னீத் சிங் ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 24 ரன்கள் அடித்தார். அபாரமாக பந்துவீசிய கர்நாடகா தரப்பில் வாசுகி கவுஷிக் மற்றும் மனோஜ் பந்தகே தலா 3 விக்கெட்டுகளும், வியாதர் பட்டில் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி கர்நாடகா களமிறங்க உள்ளது.